Thoughts


சிவயோக சித்தர் அருள் மொழிகள்





முடங்கி போய் விடாதே!

மனிதனே !


இந்த உலகம் மிக பரந்து விரிந்து கிடக்கின்றது . ஆனால் நம்முடைய இருப்பிடம் மிகவும் சிறியது என்பதை உணர்ந்து கொள் . அந்த சிறிய இருப்பிடத்துக்குள்ளேயே நீ முடங்கி போய் விட்டால், உனது வாழ்க்கையில் எப்படிமுன்னேற்றம் வரும் ? உன் வாழ் நாளில் யாரையும் சந்திக்காமல் , அவர்களிடத்தில் மனம் விட்டு பேசாமல், புதிய, புதிய விஷயங்களை பற்றி அறிந்து கொள்ளாமல், சிறை பறவையாய் அடைந்து கிடந்தால் எப்படி?

 

அதனால் உனக்கு எந்த நன்மையும் வந்து விடாது. முதலில் தன்னை பற்றி உயர்வாக நினைத்து கொள்ளும் மனப்பான்மையை விட்டு விலகு. அனைவரிடமும் அன்புடன் பழகு உன்னிடம் இருப்பதை பிறருக்கும் கொடுத்து உதவு. பிறகு பார் இந்த உலகம் உன் கையில், உயர் பதவிகள் உன் அருகில். இறைவன் உன்னை உச்சத்தில் வைத்து மகிழக் காண்பாய் .




பிரச்சனைகள் இல்லாத வாழ்வு


மனிதனே !

உனது வாழ்வில் அன்றாடம் பல பிரச்சனைகள் எழும் என்றாலும் இவற்றை எல்லாம் எப்படி சமாளிப்பது ? எப்படி வெல்வது? என்பதை பற்றி சிந்தித்து பார், தெளிவு பிறக்கும். கடவுளின் மீது நம்பிக்கை வைத்தால் நிச்சயம் நல்ல வாழ்வை அவன் அருள்வான்.




உணவு சாப்பிடும் முறை


நீ அன்றாடம் உணவு சாப்பிடும் போது எப்படி அமர்ந்து சப்பிடுகின்ராய் என்பதை பொறுத்தே உன் வாழ்கையில் இன்பம், துன்பம் அமைகின்றது.

இது இறைவனின் கட்டளையாகும் இதோ இப்படி நடந்தால் இப்படி நடக்கும், அது என்னவென்று தானே நீ என்னை கேட்கிறாய் இதோ அந்த உண்மைகள் !

கிழக்கு பார்த்த திசையில் நீ அமர்ந்து சாப்பிடும் போது உன் ஆயுள் வளரும்.

மேற்கு நோக்கி நீ அமர்ந்து உண்ணுகிற போது உனக்கு செல்வம் நற்பொருள் வந்து சேரும்.

தெற்கு பார்த்து நீ உட்கார்ந்து சாப்பிடும் போது உடலில் நோய்கள் வந்து சேரும் மருத்துவ செலவுகள் கூடும் நன்மைகள் சேராது.

வடக்கு நோக்கி அமர்ந்து உண்பவர்களுக்கு செல்வம், நற்பொருள், புகழ் வந்து சேரும், எனவே இறை பக்தி கொண்டு, இதன் படி நட, இது  சிவ யோக சித்தர் வாக்கு.